×

அவ்வையார் விருது பெறும் எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: அவ்வையார் விருது பெறும் எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள வாழ்த்துச் செய்தி: சாதி, மதம், பாலினம், இனம் என பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாக பேசும் ‘கருக்கு’ எனும் தன்வரலாற்று புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதை பெறுகிறார். மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்து நடையால் தமிழிலக்கியத்துக்கு பங்காற்றி, இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கும் அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அவ்வையார் விருது பெறும் எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Bama ,Chennai ,M.K.Stal ,Bastina Susairaj ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...