×

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.518.26 கோடியில் முடிவுற்ற 4 சாலைகள், ஒரு பாலம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.518 கோடி செலவில் முடிவுற்ற 4 சாலைகள் மற்றும் ஒரு பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோல், 219 இளநிலை வரைதொழில் அதிகாரிகளுக்கு பணியிட நியமன ஆணைகளை வழங்கினார். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் ஆலங்குளம் வட்டங்களில் ரூ.196 கோடியே 84 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்கு வழிச் சாலை முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ரூ.108 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் – முடிச்சூர் -ஸ்ரீபெரும்புதூர் நான்கு வழிச் சாலை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில்,

மதுராந்தகம் மற்றும் உத்திரமேரூர் வட்டங்களில் ரூ.54 கோடியே 35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புக்கத்துரை – உத்திரமேரூர் நான்கு வழிச் சாலை; திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் ரூ.140 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலூர் – சித்தூர் நான்கு வழிச் சாலை; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருத்தணி நாகலாபுரம் சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடியே 57 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் ரூ.518 கோடியே 26 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல், 219 இளநிலை வரைதொழில் அதிகாரி பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி, தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.518.26 கோடியில் முடிவுற்ற 4 சாலைகள், ஒரு பாலம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Highways Department ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,Tirunelveli ,Tenkasi Districts ,Tirunelveli… ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...