×
Saravana Stores

ஆஸ்கர் வரும் பின்னே… பரிசுகள் வரும் முன்னே..ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.4 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை தரும் நிறுவனம்

வாஷிங்க்டன்: ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு சுற்றுலா பயணம், அழகு சாதன பொருட்கள் என ரூ.1 கோடி யே 40 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 11ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற உள்ளது.எந்தெந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. டிஸ்டிங்டிவ் அஸெட்ஸ் என்ற நிறுவனம் தன்னிச்சையாக இந்த பரிசு பொருட்களை கடந்த 22 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.

அதிகபட்சமாக ரூ.40 லட்சம் மதிப்பிலான சுற்றுலா பயணம் பரிசாக வழங்கப்படுகிறது. ஸ்விசர்லாந்தின் ஆப்ஸ் மலை தொடரில் உள்ள ஷாலேட் ஜெர்மாட் மலையில் பனிக்கு நடுவே அழகான சொகுசு வீட்டிற்கு சுற்றுலா செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல சர்ம பாதுகாப்பு பொருட்கள், செல்ல பிராணிகளுக்கான உணவுகள், சாக்லேட், சர்க்கரையில்லா இனிப்புகள் உள்ளிட்டவையும் பரிசாக வழங்கப்பட உள்ளன. சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் ஸ்டார்ட் அப் மற்றும் பெண்கள் நடத்தும் தொழில்களுக்கு உதவும் வகையில் அவர்களிடம் வாங்கிய பொருட்களையே இந்த நிறுவனம் பரிசாக வழங்கி வருகிறது.

 

The post ஆஸ்கர் வரும் பின்னே… பரிசுகள் வரும் முன்னே..ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.4 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை தரும் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Oscars… ,Washington ,Oscar award ceremony ,Los Angeles, USA ,Oscars ,Dinakaran ,
× RELATED ஹாலோவீன் தினம் : பயங்கர பேய் உருவங்கள்,...