×

பெங்களூருவில் குடிநீர் தட்டுபாடு: ஊரையே காலி செய்யும் மக்கள்.. சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஒரு சில தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்களும் ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3,000க்கும் மேற்பட்ட அழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் லாரி தண்ணீரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது. இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் வீடுகளை காலிசெய்து விட்டு சொந்த ஊருக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன.

விஜயநகரில் உள்ள ஒரு பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுக்கப்படுகிறது. அதே போல் பன்னர்கட்டா ரோட்டில் உள்ள தனியார் பள்ளியும் குடிநீர் தட்டுப்பாட்டை குறிப்பிடாமல் அவசர நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.

The post பெங்களூருவில் குடிநீர் தட்டுபாடு: ஊரையே காலி செய்யும் மக்கள்.. சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Bangalore ,Karnataka ,Dinakaran ,
× RELATED பாஜ எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு