×

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது: விமானியின் சாதுரியத்தால் 249 பயணிகள், ஊழியர்கள் தப்பினர்

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் விமானத்தின் டயர் தனியாக கழன்று விழுந்ததால் தடுமாறிய பயணிகள் விமானம் விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் பி 777 பயணிகள் ஜெட் விமானம் நேற்று காலிஃபோர்னியா மாகாணத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டது. ஓடுதளத்தில் பயணித்து விமானம் உயரக்கிளம்பிய தருணத்தில் அதன் பின்பக்க டயர்களில் ஒன்று தனியாக கழன்று கீழே விழுந்துவிட்டது.

விமானம் உயரே கிளம்பிய நிலையில் டயர் விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை விமானத்தில் இருந்து கழன்ற டயர் சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே விழுந்துள்ளது. இதனிடையே ஒரு டயர் இல்லாத நிலையில் விமானம் மிகுந்த எச்சரிக்கையுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானியின் சாதுரியத்தால் விமானத்தில் இருந்த 249 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் உயிர்தப்பினர். சில மணி நேர தாமதத்திற்கு பிறகு மாற்று விமானத்தில் பயணிகள் ஜப்பானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பறக்கும் போது விமானத்தின் டயர் கழன்று விழுந்தது எப்படி என யுனைடெட் ஏர்லைன்ஸ் தொழில்நுட்ப நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

The post அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது: விமானியின் சாதுரியத்தால் 249 பயணிகள், ஊழியர்கள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : USA ,San Francisco ,US ,United Airlines ,United States ,California ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!