×

மன்னார்குடியில் விலையில்லா காலணிகள் வழங்க மாணவர்கள் கால்பாதம் அளவிடும் பணி மும்முரம்

மன்னார்குடி, மார்ச் 8: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா காலணிகள் வழங்குவதற்காக கால் பாதங்களை அளவெடுக்கும் பணிகளை இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணிகள் அளவு வித்தியாசமாக இருப்ப தால் மாணவர்கள் அணிவதில் சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு சரியான அளவில் காலணிகளை வழங்குவதற்காக இல்லம் தேடிக் தன்னார்வலர்களைக் கொண்டு பிரத்தியேக செயலி மூலமாக ஒவ் வொரு மாணவனுடைய கால் பாதங்களையும் அளவெடுத்து ஆன்லைன் செயலியியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் தொடக்கப் பள் ளியில் நடைபெற்ற இப்பணியில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் பூங்குழலி ஈடுபட்டார். இப்பணியை திருவாரூர் மாவட்ட அளவில் ஒருங் கிணைத்து வரும் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, மன்னார்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வஜ்ரசிங் ஆகியோர் பார்வையிட்டனர். மன்னார்குடி ஒன்றியத்தில் இதுவரை 19, 200 மாணவர் களுடைய பாத கால் அளவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மன்னார்குடியில் விலையில்லா காலணிகள் வழங்க மாணவர்கள் கால்பாதம் அளவிடும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Tiruvarur district ,Tamil Nadu government ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை