×

1,000 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை அரியலூர் எஸ்.பி. எச்சரிக்கை

அரியலூர், மார்ச் 8: குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இவ்வாறான குழந்தை கடத்தல் பற்றி வரும் தகவலகள் உண்மைக்கு மாறானதாகவே உள்ளது. யாரேனும் இது போன்ற வதந்திகளை பரப்பினால் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுவரை குழந்தைகள் காணாமல் போனதாகவோ அல்லது கடத்தப்பட்டதாகவோ எந்த ஒரு தகவலும் புகாரோ மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு காவல் நிலையத்திலும் வரவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 க்கு தொடர்பு கொள்ளவும் அல்லது அரியலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181224 / 04329-221500 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளவும்.

மேலும், குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் யாரும் பகிர வேண்டாம். அவ்வாறு பகிர்பவர்கள் மீதும், குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் வதந்திகளை நம்பி, சந்தேக நபர்களை தாக்குதல் போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 1,000 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை அரியலூர் எஸ்.பி. எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ariyalur S.B. ,Ariyalur ,District ,Superintendent of Police ,Selvaraj ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...