×

தோகைமலை கிழக்கு ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தோகைமலை, மார்ச் 8: தோகைமலை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள 10 ஊராட்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வடசேரி, புத்தூர், தளிஞ்சி, ஆலத்தூர், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, ஆச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி ஆகிய 10 ஊராட்சிகளில் நடந்த நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர்அண்ணாதுரை தலைமையில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில் தோகைமலை ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய துணை செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post தோகைமலை கிழக்கு ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tokaimala East Union ,Thokaimalai ,MK Stalin ,East Union ,Tamil Nadu ,DMK ,President ,M.K.Stal ,Tokaimalai East Union ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...