×

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரூர், மார்ச் 8: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், நேற்று அரூரில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வரும் மார்ச் 11ம் தேதி, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவது, இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் அரசின் சாதனைகளை வீடுதோறும் எடுத்து சென்று பிரசாரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

இதில் நகர செயலாளர் முல்லை ரவி, ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், செங்கண்ணன், ரத்தினவேல், பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், துணை தலைவர் சூர்யா தனபால், ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் ராஜேந்தின், தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், பொதுகுழு உறுப்பினர் கலைவாணி, தென்னரசு, செந்தாமரைகண்ணன், தேசிங்குராஜன், சண்முகநதி, தமிழழகன், விண்ணரசன், செல்வதயாளன், கோடீஸ்வரன், முகமதுஅலி, கவிதா, திருவேங்கம், மோகன், பெருமாள், சின்னசாமி, கணேசன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Aroor ,Dharmapuri West District DMK ,West District ,Palaniappan ,Dharmapuri Government Arts College ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்