×

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம்

 

ஈரோடு,மார்ச்8: ஈரோடு, திருப்பூர், தேனி மண்டலத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவுப்பதிவாளர்கள் மற்றும் செயற்பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இதில் ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களிடமிருந்து ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல்களை நூறு சதவீதம் பெற்று உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் முகமையிலிருந்து பட்டியல் பெற்று இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கூட்டுறவு தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு நடவடிக்கை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார்,

திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுத் துறை சார்ந்த சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைபதிவாளர்கள், பால்வளம், கைத்தறி, உதவி இயக்குநர்கள், செயற்பதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode, Tirupur, Theni Mandal ,Secretary of ,Tamil Nadu State Cooperative Societies Election Commission ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...