×

புது மஞ்சள் விலை தொடர்ந்து உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

 

ஈரோடு,மார்ச்8: ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், கூட்டுறவு சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. கடந்த மாதம் இறுதியில் இருந்து விற்பனைக்கு வரும் மஞ்சளின் விலை மெல்ல உயர்ந்து வருகின்றது. நேற்று முன்தினம் சேலம் பெருவட்டு புது மஞ்சள் குவிண்டால் ரூ.19 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினத்தை விட நேற்று புது மஞ்சள் விலையானது குவிண்டால் ஒன்றுக்கு சராசரியாக ரூ.700 வரை விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று முன்தினம் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புது மஞ்சள் விரலி அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 888க்கு விற்பனையானது.

கிழங்கு ரூ.15 ஆயிரத்து 99க்கு விற்ற நிலையில், நேற்று புதுமஞ்சள் விரலி ரூ.17ஆயிரத்து 599க்கும், கிழங்கு ரூ.15 ஆயிரத்து 699க்கும் விற்பனையானது. ஆனால் பழைய மஞ்சள் குவிண்டால் விரலி அதிகபட்சம் ரூ.15 ஆயிரத்து 523க்கும், கிழங்கு அதிகபட்சம் ரூ.14 ஆயிரத்து 610க்கும் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். இதே போல மற்ற மார்க்கெட்டுகளிலும் நேற்றுமுன்தினத்தை விட நேற்று சற்று உயர்ந்து காணப்பட்டது.

The post புது மஞ்சள் விலை தொடர்ந்து உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Erode ,Salem Peruvatu ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...