×

‘மைவி3’ உரிமையாளர் சிறையில் அடைப்பு

கோவை: மதுரையை சேர்ந்தவர் விஜயராகவன் (48). இவர் வி3 ஆன்லைன் டிவி, மைவி3 ஆட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. தற்போதைய மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த சக்தி ஆனந்தன் (43) என்பவர் மீதும் மோசடி குற்றசாட்டு எழுந்தது. தமிழ்நாடு, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் போலி வாக்குறுதி அளித்து சுமார் ₹20 ஆயிரம் கோடி வரை இவர்கள் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் பெற்று அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் மதுரையில் தங்கியிருந்த விஜயராகவனை கைது செய்த போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். இதையடுத்து இவர் அதிக ரத்த அழுத்தம், நீரழிவு நோய் பாதிப்பின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 நாள் சிகிச்சைக்கு பின், இவர் நேற்று மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் போலீசார் கஸ்டடி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

The post ‘மைவி3’ உரிமையாளர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : MyV3 ,Coimbatore ,Vijayaraghavan ,Madurai ,V3 Online TV ,Vellakinaru ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...