×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று புதிய கல்லூரிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 01.12.2021 காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த 04.09.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் B.Com, BBA, BCA, B.Sc. Computer Science ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் கல்லூரி தொடங்கிட உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை 06.10.2021 அன்று வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 02.11.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் ஒட்டன்சத்திரம், சின்னயகவுண்டன்வலசில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின்கீழ் இணைக்கப்பட்டு அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமய  வகுப்புகளுடன் தற்காலிக கட்டடத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக பெரியார் பல்கலைக் கழகத்தின்கீழ் இணைக்கப்பட்ட அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுப்புளியம்பட்டி கிராமத்தில் தற்காலிக கட்டடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இக்கல்லூரிகள் பெரிதும் உதவியாக அமையும்….

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Tamil ,Nadu ,Hindu Relational Foundation ,G.K. stalin ,Chennai ,Hindu Religious School of Women's Arts and Sciences ,Otanshastram ,Arulmigu Palaniyanthavar ,Dintukal ,District ,Hindu Religious Foundation ,Chief Minister of ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் கலைஞரின்...