×

சாலைப்பணிக்கு சென்றபோது கொலை வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்: தேனியில் பரபரப்பு

 

ஆண்டிபட்டி, மார்ச் 8: சாலைப்பணிக்கு சென்று கொலையான உசிலம்பட்டி வாலிபரின் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் லோகேஸ்வரன் (22). இவர் கடந்த மாதம் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் அமைக்கும் சாலை பணியில் வேலை செய்ய சென்றார்.

அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறி, கடந்த பிப்.29ம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் வயிற்றுப் பகுதியில் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே லோகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், லோகேஸ்வரனை தாக்கியதாக உசிலம்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். இதற்கிடையே லோகேஸ்வரனின் உறவினர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் கொலை செய்ததாக 16 வயது சிறுவனை கைது செய்ததை ஏற்க முடியாது என்றும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின் உடலை வாங்கி சென்றனர்.

The post சாலைப்பணிக்கு சென்றபோது கொலை வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்: தேனியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Theni ,Andipatti ,Usilampatti ,Theni Government Hospital ,Narayanan ,Thottapanayakanur ,Usilambatti ,Madurai ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு