×

தமிழ்ச்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

 

சிவகங்கை, மார்ச் 8: சிவகங்கையில் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். தமிழ்ச் செம்மல் பகீரதநாச்சியப்பன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் செயலாளர் யுவராஜ் வரவேற்றார். நிர்வாகிகளை அறிமுகம் செய்து நிறுவனத்தலைவர் ஜவகர்கிருஷ்ணன் பேசினார். தலைவராக அன்புத்துரை, துணைத்தலைவர்களாக சரளாகணேஷ், பாண்டியராசன், செயலாளராக மாலா, இணைச்செயலாளர்களாக ரமேஷ்கண்ணன், பாலசுப்பிரமணியன், பொருளாளராக பால்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

கவிஞர் மூரா சிறப்புரையாற்றினார். தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற நடராசன், கலைச்செம்மல் விருது பெற்ற பால்ராஜ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜசேகரன், குணசேகரன், கலைஇலக்கிய பெருமன்றத்தலைவர் சுந்தரமாணிக்கம், வழக்கறிஞர் ராம்பிரபாகர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

The post தமிழ்ச்சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Sangha ,Sivagangai ,Tamil Sangh ,Kannappan ,Tamil ,Chemmal Bhagirathanachiyappan ,Former Secretary ,Yuvraj ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்