- 2 நாள் சர்வதேச மாநாடு
- அமெரிக்கன் கல்லூரி
- மதுரை
- உயிரியல் கண்டுபிடிப்புகள்
- ஐசிஎன்பிஐ 24 இன் நியூட்ரியோமிக்ஸ்
- உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை
- மதுரை அமெரிக்கன் கல்லூரி
- டிபிடி
- டாக்கா, பங்களாதேஷ்...
- தின மலர்
மதுரை, மார்ச் 8: மதுரை அமெரிக்கன் கல்லூரி, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை, டிபிடி நிதியுதவியுடன் ‘பயோடெக்னாலஜிக்கல் இன்னோவேஷன்ஸ் – ஐசிஎன்பிஐ 24ன் நியூட்ரி ஓமிக்ஸ்’ என்ற 2 நாள் சர்வதேச மாநாடு நடந்தது. வங்க தேசம் டாக்கா யுஎஸ் பங்களா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை இணைப் பேராசிரியர் டாக்டர் ருக்ஸானா ரைஹான் அமிட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வில்சன் அருணி தலைமை விருந்தினர்களாக பங்கேற்று மாநாட்டைத் துவங்கிவைத்து பேசினர்.
அமெரிக்கன் கல்லூரி முதல்வர், செயலர் எம்.தவமணி கிறிஸ்டோபர் ஆரம்ப அமர்வுக்கு தலைமை வகித்து, கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறையின் வளர்ச்சி குறித்து பேசினார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து பெறப்பட்ட 141 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் 26 கல்லூரிகளில் இருந்து 407 பேர் கலந்து கொண்டனர்.
பிரபல பேச்சாளர்கள் வில்சன் அருணி, ருக்ஸானா ரைஹான் ஆகியோருடன் விஞ்ஞானி இம்மானுவல் க்ளைவாக்ஸ் பிரபு, பேராசிரியர்கள் ஜோசப் செல்வின், சதீஷ் குமார், சேகல் கிரண், சுந்தர், சுதாகர் சிவசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். தேனி ஆனந்தம் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் செல்வராஜன், நானோ ஏவியேஷன் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த சர்வதேச மாநாட்டின் அமைப்புச் செயலாளர்கள் நித்யா, முதுகலை துறைத்தலைவி எஸ்.பிரியதர்ஷினி மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post அமெரிக்கன் கல்லூரியில் 2 நாள் சர்வதேச மாநாடு appeared first on Dinakaran.