×

புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

அம்பை, மார்ச் 8: அம்பை நகராட்சி 4வது வார்டு கோவில்குளம் பகுதியில் ரூ.8 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. அம்பை நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு நகர்மன்ற துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினர் அனுசுயா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அங்கன்வாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சுவர்ணலதா, ராஜேஸ்வரி, திமுக மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் தினகர் பாண்டியன், அமானுல்லா, முத்து துரை, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாத்துரை, ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கணேசன், மாரியப்பன், சிங்கநாதம், பிச்சுக்குட்டி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : New Anganwadi Center Building ,Ambai ,Anganwadi center ,4th Ward Govilkulam ,Ambai Municipality ,Municipal Commissioner ,Rajeshwaran ,Anganwadi ,Centre ,City ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது