×

ரூ.36.99 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு: கொளத்தூரில் ரூ.205.40 கோடியில் புதிய திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


சென்னை: கொளத்தூர், மேயர் சிட்டிபாபு பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி சார்பில் ரூ.10.13 கோடியில் முடிவுற்ற 15 திட்டப்பணிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.28.50 கோடியில் 11 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, உழவர் சந்தை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.26.86 கோடியில் முடிவுற்ற 2 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.176.90 கோடியில் 7 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

முடிவுற்ற திட்டப்பணிகள்: ரூ.1.18 கோடியில் மேயர் சிட்டிபாபு பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு மைதானம், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஜி.கே.எம்.காலனி, 34வது தெருவில் ரூ.35 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் ரூ.45 லட்சத்தில் நீத்தார் நினைவு மண்டபம் மற்றும் ரூ.35 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம், பள்ளி சாலையில் ரூ.34.90 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம், பல்லவன் சாலையில் ரூ.35 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம், ஜவஹர் நகர் 2வது குறுக்குத் தெருவில் ரூ.35 லட்சத்தில் விளையாட்டுக் கூடம், கொளத்தூர் 200 அடி உள்வட்டச் சாலையில் ரூ.94.40 லட்சத்தில் 88 தெருவிளக்குகள்,

சீனிவாசன் நகர்-6வது தெருவில் ரூ.35 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட குளம் மற்றும் நடைபாதை, வெற்றி நகர், கண்ணியப்பன் தெருவில் ரூ.34.80 லட்சத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம், பல்லவன் சாலையில் ரூ.24.43 லட்சத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், கோயில் சாலை முதல் குறுக்குத் தெருவில் ரூ.7.05 லட்சத்தில் இ-சேவை மையம், சோமையா ராஜா தெரு சென்னை உயர்நிலைப் பள்ளியில் ரூ.9 லட்சத்தில் மாணவர்கள் உணவருந்தும் கூடம், ஜெகநாதன் சாலையில் ரூ.33.56 லட்சத்தில் உதவி செயற்பொறியாளர் (பகுதி-15) அலுவலக கட்டிடம், பந்தர் கார்டன் சென்னை பள்ளியில் ரூ.4.37 கோடியில் புதுப்பிக்கப்பட்ட 5 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.10.13 கோடியில் முடிவுற்ற 15 திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

புதிய திட்ட பணிகள்: திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர், வார்டு-64 முதல் 70 வரையுள்ள பகுதிகளில் ரூ.86 லட்சத்தில் 10 உயர்கோபுர மின்விளக்குகள். நேர்மை நகர் மயானபூமியில் ரூ.56 லட்சத்தில் கூடுதலாக எரிமேடை. ஜெகநாதன் தெரு பல்நோக்குக் கட்டடத்தில் ரூ.79 லட்சத்தில் கூடுதலாக முதல் தள கட்டிடம். சென்னை 2.0 திட்டதில், முத்துகுமாரப்பா சாலையில் ரூ.13.47 கோடியில் நவீன வசதிகளுடன் சமுதாய நலக்கூடம். அமிர்தம்மாள் காலனியில் ரூ.25 லட்சத்தில் பூப்பந்தாட்ட மைதானம்.

லோகோ ஒர்க்ஸ் சாலையில் ரூ.1.03 கோடியில் குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்கம், ரங்கசாயி தெருவில் பழுதடைந்துள்ள சென்னை நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.2.75 கோடியில் புதிய கட்டிடம். சோமையா ராஜா தெருவில் பழுதடைந்த சென்னை உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.3 கோடியில் புதிய கட்டிடம்.கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மாதவரம் நெடுஞ்சாலை, லட்சுமி அம்மன் கோயில் தெரு சந்திப்பில் ரூ.12 லட்சத்தில் நவீன பேருந்து நிழற்குடை.

கபிலர் தெரு சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.1.03 கோடியில் கிழக்குப் பகுதி கட்டிடத்தை புனரமைத்தல், கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.4.63 கோடியில் பழுதடைந்துள்ள கட்டிடத்தினை இடித்துவிட்டு புதிய கட்டிடம் என மொத்தம் ரூ.28.50 கோடியில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

சிஎம்டிஏ சார்பில் ரூ.55 கோடியே 50 லட்சத்தில் பேப்பர் மில்ஸ் சாலையில் நவீன சந்தை, கொளத்தூர், ஜெகன்நாதன் சாலையில் மாற்றுத்திறனாளிக்கான மறுவாழ்வு மையம் மற்றும் நவீன ஆய்வகம், பெரியார் நகர் பேருந்து நிலையத்தை நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையமாக மேம்படுத்துதல், சிவானந்த நகரில் உள்ள தெருக்களுக்கு ரூ.6.90 கோடியில் கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிமற்றும் பெரியார் நகர், பணிமனை 65 மற்றும் 68ல் ரூ.44.26 கோடியில் கழிவுநீர் கட்டமைப்புகள்.

சென்னை உள்வட்டச் சாலை, செந்தில் நகர் சந்திப்பில் ரூ.15.42 கோடியில் நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைபாதை மேம்பாலம், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.54.82 கோடியில் கூடுதலாக 4, 5 மற்றும் 6வது தளங்கள் கட்டும் பணி என மொத்தம் ரூ.176.90 கோடியில் 7 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன தலைவர் ரங்கநாதன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் செயலாளர் பிரதீப் யாதவ், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, பொதுப்பணித் துறை செயலாளர் சந்தர மோகன், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் கணேசன், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன் மற்றும் ஹெலன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
முத்து குமாரப்பா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 355 மாணவ, மாணவியருக்கு தையல் இயந்திரங்கள், 127 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள், 250 மாணவ, மாணவியருக்கு கல்லூரிக் கட்டணம் மற்றும் 750 பயனாளிகளுக்கு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பணிகளை ஆய்வு செய்தார்.

* கழிவுநீர் உந்து நிலையம்
கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ரூ.7.30 கோடியில் புனரமைக்கப்பட்ட கொளத்தூர் ஏரி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் வீனஸ் நகர் பகுதியில் ரூ.19.56 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையம் என மொத்தம் ரூ.26.86 கோடியில் முடிவுற்ற 2 திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

The post ரூ.36.99 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு: கொளத்தூரில் ரூ.205.40 கோடியில் புதிய திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Mayor Chitibabu Park and Children's Playground ,Kolathur.… ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு...