- பெங்களூர்
- பல்லாரி
- என்.ஐ.ஏ.
- ராமேஸ்வரம் கஃபே
- குண்டலஹள்ளி பகுதி
- பெங்களூர் வெயிட் ஃபீல்ட்,
- பெங்களூரு
- தின மலர்
பெங்களூரு பெங்களூரு ஒயிட் பீல்ட் அடுத்த குந்தலஹள்ளி பகுதியில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1ம் தேதி இரண்டு முறை குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் ஒப்படைத்துள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் மர்ம நபரை அடையாளம் காட்டுவோருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பல இடங்களில் மர்ம நபரின் புகை படங்களை வெளியிட்டு தேடி வருகிறது.
இதனிடையில் மர்ம நபர் பெங்களூருவில் இருந்து துமகூரு மாவட்டம் வழியாக பல்லாரி சென்றிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து துமகூரு பேருந்து நிலையத்தில் உள்ள சிசி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் பல்லாரி பேருந்து நிலையத்தில் இருந்து மந்திராலயா முதல் கோகர்ணா செல்லும் பேருந்தில் பயணம் செய்து, பட்கல் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, பல்லாரி மாவட்டத்திற்கு சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் வலைவீசி தேடி வருகிறார்கள்.
The post பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி பல்லாரிக்கு தப்பியோட்டம்: தேடுதலை தீவிரப்படுத்திய என்ஐஏ அதிகாரிகள் appeared first on Dinakaran.