துபாய்: ஏடன் வளைகுடாவில் சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரில் ஏமனில் உள்ள ஹவுதி படையானது ஹமாசுக்கு ஆதரவு அளித்து வளைகுடா பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. நேற்று முன்தினம் ஏமன் வளைகுடாவில் சென்ற லைபீரியாவிற்கு சொந்தமான பார்படாஸ் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். 21 ஊழியர்கள் மீட்பு: ஏடன் வளைகுடாவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா, ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான லைபீரியாவுக்கு சொந்தமான கப்பல் குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தது.
உடனடியாக தீப்பற்றி எரியும் அந்த சரக்கு கப்பலில் இருந்து இந்தியாவை சேர்ந்த ஒருவர் உட்பட 21 ஊழியர்களை மீட்டது. காயமடைந்தவர்களுக்கு இந்திய கப்பலில் இருந்த மருத்துவ குழுவினர் மருத்துவ உதவிகளை செய்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் டிஜிபோதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
The post சரக்கு கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்;3 பேர் பலி appeared first on Dinakaran.