×

தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக 82% அறியப்படாத வருமானம்: இதிலும் பாஜவுக்கு அதிகம்

புதுடெல்லி: தேசிய கட்சியின் தணிக்கை செய்யப்பட்ட வருவாய் மற்றும் நன்கொடை தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2004-05ம் ஆண்டு முதல் 2022-23ம் நிதியாண்டுகள் வரை தேசிய கட்சிகள் அறியப்படாத ஆதாரங்கள் மூலம் பெற்ற மொத்த வருவாய் ரூ.19,083 கோடி.

இதில் 2022-23ம் நிதியாண்டில் பாஜ, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள் மொத்தம் ரூ.1,832.88 கோடி அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருவாயாக பெற்றுள்ளன.

இதில், ரூ.1,510 கோடி அதாவது 82.42 சதவீதம் வருமானம் தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்தவை. மொத்த வருவாயில் அதிகபட்சமாக (76.39%) பாஜவுக்கு ரூ.1,400 கோடி வருவாய் கிடைத்துள்ளது. காங்கிரசுக்கு ரூ.315.11 கோடி (17.19%) வருவாய் கிடைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கூப்பன்கள் விற்பனை மூலம் ரூ.136.79 கோடி வருமானம் ஈட்டியுள்ளன.

The post தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக 82% அறியப்படாத வருமானம்: இதிலும் பாஜவுக்கு அதிகம் appeared first on Dinakaran.

Tags : BJP ,NEW DELHI ,National Party ,Election Commission ,Democratic Reforms Organization ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...