×

தொடங்கியது கடைசி டெஸ்ட் இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து

தர்மசாலா: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று தர்மசாலாவில் தொடங்கியது. இந்திய வீரர் ரவி அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ இருவருக்கும் இது 100வது டெஸ்ட் என்பதால் ரசிகர்களும், இரு அணி வீரர்களும் இருவரையும் கைதட்டி பாராட்டினர். கூடவே அஷ்வினுக்கு 100 ஆட்டத்துக்கான தொப்பியை பயிற்சியாளர் திராவிட் வழங்கினார். இந்திய அணியில் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக மீண்டும் பும்ரா களமிறங்கினார். தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறி வந்த ராஜ் பத்திதார் நேற்று பயிற்சியின் போது காயமடைந்தார்.

அதனால் அவருக்கு பதில் தேவதூத் படிக்கல் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இங்கிலாந்து அணியில் ஆலிவர் ராபின்சன்னுக்கு பதிலாக மார்க் வுட் மீண்டும் வாய்ப்பு பெற்றார். டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் கிரெவ்லி, டக்கெட் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 64ரன் சேர்த்தனர். டக்கெட்டை 27 ரன்னில் வெளியேற்றினார் குல்தீப். அதன் பிறகு போப் , கிரெவ்லியுடன் இணை சேர கிரெவ்லி இந்திய பந்து வீச்சை வெளுக்க ஆரம்பித்தார்.

கூடவே தனது 15வது ்அரைசதத்தையும் கடந்தார். ஆனால் அவர் 79ரன் எடுத்திருந்த போது குல்தீப் ஆட்டமிழக்க செய்தார். இந்தியாவின் சுழலில் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கூடவே குல்தீப், ஜடேஜா னெ மற்ற சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட் அறுவடை செய்ய, 100வது டெஸ்ட்டில் விளையாடும் அஸ்வினுக்கு 49வது ஓவர் வரை விக்கெட்டே கிடைக்கவில்லை. ஆனால் 50வது ஓவரில் , டாம் ஹார்ட்லி 6, மார்க் வுட் 0 ரன்னில் அஸ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கூடவே 58வது ஓவரில் அஸ்வின் மேலும் 2 விக்கெட்களை சுருட்ட இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 57.4ஓவரில் 218ரன்னுக்கு ஆட்டமிழந்தது. சோயிப் பஷிர் 11ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்திய சுழல் வீரர்கள் குல்தீப் 5, அஸ்வின் 4, ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர். அதன் பிறகு இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பொறுப்பாக விளையாடிய ரோகித், ஜெய்வால் இணை முதல் விக்கெட்டுக்கு 104ரன் சேர்த்தது.

அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் 57ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து வீரர்கள் ஒரு உதிரி கூட தராமல் கட்டுக்கோப்பாக பந்து வீசியும் இன்னொரு விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. எனவே இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135ரன் எடுத்தது. இங்கிலாந்தின் சுழல் சோயிப் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்நிலையில் களத்தில் உள்ள இந்தியாவின் ரோகித் 52, சுப்மன் 26ரன்னுடன், 83ரன் பின்தங்கிய நிலையில் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.

The post தொடங்கியது கடைசி டெஸ்ட் இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : England ,India ,Dharamsala ,Ravi Ashwin ,Jonny Bairstow ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...