×

கடைசி டெஸ்ட்டில் நியூசி-ஆஸி மோதல்

கிறைஸ்ட்சர்ச்:நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3ஆட்டங்களை கொண்ட டி20 தொடரை ஆஸி 3-0 என்ற கணக்கில் கைபற்றி நியூசியை ஒயிட் வாஷ் செய்தது. இந்நிலையில் இந்த 2 அணிகளும் 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட்டில் வென்ற ஆஸி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2வது டெஸ்ட் இன்று கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்குகிறது.

ஏற்கனவே முதல் டெஸ்ட் முன்னிலை கரணமாக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி உற்சாகமாக களம் காணுகிறது. அந்த அணியின் கேமரன் கிரீன், மிட்செல் மார்ஷ், உஸ்மான் கவாஜா, ஆகியோர் பேட்டிங்கிலும், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசல்வுட் ஆகியோர் பந்து வீச்சிலும் கலக்கி வருகின்றனர். அதனால் தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் டிம் சவுத்தீ தலைமையிலான நியூசி அணிக்கும் இந்த டெஸ்ட்டும் பெரும் சவாலாக இருக்கும்.

அந்த அணியில் கேன் வில்லியம்சன் உட்பட அனுபவ வீரர்கள் பலரும் சொ தப்பி வருகின்றனர். அதே நேரத்தில் ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்றி, டாரியல் மிட்செல் ஆகியோர் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்கின்றனர். அதே போல் மற்ற நியூசி வீரர்களும் விளையாடினால், ஆஸி வெற்றிக்காக போராட வேண்டி இருக்கும். இந்த ஆட்டத்தில் வென்றால் நியூசி தொடரை சமன் செய்யும். டி20 தொடரில் வாஷ் அவுட் ஆனதுக்கு ஆறுதல் டிராவாக இருக்கும். இல்லாவிட்டால் ஆஸியிடம் மீண்டும் ஒயிட் வாஷ் ஆகும்.

* கேன் 100… டிம் 100
இன்று தொடக்கும் டெஸ்ட் ஆட்டம் நியூசி கேப்டன் டிம் சவுத்தீக்கும், கேன் வில்லியம்சன்னுக்கும் இது 100வது டெஸ்ட். இதன் மூலம் 100வது டெஸ்ட்டில் விளையாடும் 5வது, 6வது வீரர்கள் என்ற பெருமையை இருவரும் பெறுகிறார்கள். கூடவே டி20, ஒருநாள், டெஸ்ட் என 3வகையான போட்டிகளிலும் 100 ஆட்டங்களில் விளையாடிய 4வது வீரர் என்ற பெருமையை சவுத்தீ பெற உள்ளார். இந்தப் பட்டியலில் ராஸ் டெய்லர்(நியூசி), கோஹ்லி(இந்தியா), வார்னர்(ஆஸி) ஆகியோர் முதல் 3 இடங்களில் இருக்கின்றனர்.

 

The post கடைசி டெஸ்ட்டில் நியூசி-ஆஸி மோதல் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Aussie ,Christchurch ,T20 ,Test ,Aussies ,T20I ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்