×

ஒருவர் பிரிந்து சென்றதற்காக குடும்பம் பிளவுபட்டதாக கருதுவது சரியல்ல: சுப்ரியா சுலே பேட்டி

புனே: தங்கள் குடும்பத்தில் பிளவில்லை என்றும், எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்றும் எம்பி சுப்ரியா சுலே தெரிவித்தார். தேசியவாத காங்கிஸ் தலைவர் சரத்பவார். இவரது அண்ணன் மகனான அஜித்பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்த சென்று ஆளும் மகாயுதி கூட்டணியில் இணைந்து துணைமுதல்வர் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சரத்பவார் அணி தலைவரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் குழந்தைகள் உட்பட 120 முதல் 125 பேர் உள்ளனர். மிகப்பெரிய குடும்பமாகும். இவ்வளவு பெரிய குடும்பத்தில் ஒருவர் மாறுபட்ட கருத்தை முன்வைத்தால் அதில் பிளவைக் குறிக்காது. எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு உள்ளது; இனியும் அப்படித்தான் இருக்கும், என்று தெரிவித்தார்.

* கறையை போக்கிய அமித்ஷாவுக்கு நன்றி
சரத்பவார், சுப்ரியா சுலேவை முதல்வராக்க முயற்சிப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது குறித்து பேசிய சுப்ரியா சுலே, ‘‘தேசியவாத காங்கிரசின் கறையை போக்கியதற்காக (அஜித்பவார் அணி மாறியது) அமித்ஷாவுக்கு நன்றி. எப்போது மகாராஷ்டிரா வந்தாலும் அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்று கூறுவார். ஆனால், பாஜ தலைவர்கள் யாருமே இப்போது அப்படிக் கூறுவதில்லை. வாரிசு அரசியல், பாஜ கட்சியிலேயே உள்ளது’’ என்றார்.

The post ஒருவர் பிரிந்து சென்றதற்காக குடும்பம் பிளவுபட்டதாக கருதுவது சரியல்ல: சுப்ரியா சுலே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supriya Sule ,Pune ,Congress ,Sharad Pawar ,Ajit Pawar ,Mahayudi ,
× RELATED பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலே மனுத்தாக்கல்