×

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஐவர் கால்பந்தாட்ட போட்டி காட்டுப்பாக்கம், லூர்துபுரத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்த்தனன், கே.எஸ்.புகழேந்தி, எம்.இளையான், ஏ.ஆர்.பாஸ்கர், ஆர்.பிரபாகரன், வி.பி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் கேஜிஆர்எஸ்.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் மாவட்டசெயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ முதல்பரிசாக ரூ.30,000 மற்றும் கோப்பையை வழங்கினார். மேலும் இரண்டாம் பரிசாக ரூ.20,000 மற்றும் கோப்பையும், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில மாணவரணி துணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ப.குமரேசன், வி.தணகாசலம், என்.சண்முகம், டி.திருமலைராஜ், எம்.ராம்பாபு, வி.திருலோகசுந்தர், கேசவன் உள்பட படர் கலந்து கொண்டனர். முடிவில் கேஜிஎம்.தியாகு நன்றி கூறினார்.

The post முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,H.M. Nasser MLA ,Tiruvallur ,Poontamalli East Union DMK ,Kattupakkam, Lurdupuram ,Tamil Nadu ,M.K. Stalin ,Union Secretary ,P.S. Kamlesh ,PM Nasser MLA ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...