×

உணவு பாதுகாப்பு மற்றும் காவல் துறைக்கு புகையிலை விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம்: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் இணைந்து, கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களின் அருகிலுள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், கடந்த நவம்பர் மாதம் முதல் 1,683 உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, 102 உணவு கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், புகையிலை போன்றவை விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 1,065.923 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, 102 கடைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், ரூ.13,90,000 அபராதம் விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் அபராத தொகையினை செலுத்தியுள்ளார்கள். கடை உரிமையாளர்களிடம் இனிவரும் காலங்களில் விற்பனை செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி கடிதமும் பெறப்படுகிறது.கடந்த மாதம் 26ம் தேதி 923.93 கிலோ ஒரே உணவு வணிகரிடம் விஷ்ணு காஞ்சி காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டருகே இவ்வாறாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்புத் துறைக்கு 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், காவல்துறையின் 94984 10581, 82489 86885 என்ற வாட்ஸ்அப் எண்களுக்கும் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உணவு பாதுகாப்பு மற்றும் காவல் துறைக்கு புகையிலை விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம்: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kalachelvi Mohan ,Food Safety Department ,Police Department ,Food Safety and ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் தொழில், வர்த்தக...