சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 10, 11-ம் தேதிகளில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மக்களவை தொகுதி வாரியாக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என எடப்பாடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 10.03.2024 – ஞாயிற்றுக் கிழமை, 11.03.2024 – திங்கட் கிழமை ஆகிய இரண்டு நாட்கள், பின்வருமாறு நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வேண்டியும்; கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்காகவும் விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும், தவறாமல் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன், மேற்கண்ட கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 10, 11-ம் தேதிகளில் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.