×

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை உயர்த்த இலக்கு: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஎன்-எஸ்பிஏசி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று திறந்து வைத்து பேசியதாவது: இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

இதை 2040ம் ஆண்டுக்குள் 5 மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் திறன் நம்மிடையே உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் விண்வெளி துறையில் ரூ.1,000 கோடிக்கும் மேலாக தனியார் துறையினர் முதலீடு செய்துள்ளனர். விண்வெளித்துறைக்கான பட்ஜெட் கடந்த 9 ஆண்டுகளில் 142 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை உயர்த்த இலக்கு: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Union Minister ,New Delhi ,Jitendra Singh ,IN-SPAC ,Ahmedabad, Gujarat ,Dinakaran ,
× RELATED எல்லா நோய்களுக்கும் சிகிச்சை...