×
Saravana Stores

யூகோ வங்கியில் 72 மணி நேரத்தில் ரூ.820 கோடியை நூதன முறையில் சுருட்டியதாக 2 மென் பொறியாளர்கள் மீது சிபிஐ வழக்கு

டெல்லி: யூகோ வங்கியில் 72 மணி நேரத்தில் ரூ.820 கோடியை நூதன முறையில் சுருட்டியதாக 2 மென் பொறியாளர்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. யூகோ வங்கி செயலியை நிர்வகிக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவிஷேக் ஸ்ரீவஸ்தவா, சுப்ரியா மல்லிக் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உடனடி ஆன்லைன் பரிவர்த்தனைக்கான IMPS குறியீட்டு எண்களை மாற்றி ரூ.820 கோடியை சுருட்டியதை சிபிஐ கண்டறிந்துள்ளது.  ராஜஸ்தான், தமிழ்நாடு உள்பட 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி முறைகேடு நடந்துள்ளது.

The post யூகோ வங்கியில் 72 மணி நேரத்தில் ரூ.820 கோடியை நூதன முறையில் சுருட்டியதாக 2 மென் பொறியாளர்கள் மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.

Tags : CBI ,UCO Bank ,Delhi ,Avishek Srivastava ,Supriya Mallick Nutana ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய விவகாரம் வருமான...