×

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பாலக்கரை பாலத்துக்கு கீழ் மினி கடைவீதி

திருச்சி: திருச்சி மாநகரில் பாலக்கரை, தென்னூர், மாரிஸ், ஜி.கார்னர், மன்னார்புரம், அரிஸ்டோ, கரூர் பைபாஸ், திருவானைக்காவல் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் உள்ளது. மாநகரில் பல இடங்களில் சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பாலத்துக்கு கீழ் உள்ள காலி இடங்களில் தெருவோர கடைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி பாலக்கரை மேம்பாலத்தில் பீமநகர் பிரிவிற்கு கீழே உள்ள காலி பகுதியில் 50 கடைகள் கட்ட மாநகராட்சி ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த இடத்தில் தலா 330 சதுர அடியில் சுமார் 50 கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பீமநகர் பகுதியில் உள்ள சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு இந்த கடைகள் ஒதுக்கப்படும்.

இதேபோல் அடுத்தகட்டமாக கிராப்பட்டி பாலத்துக்கு அடியில் 400 அடி நீளம், 25 அடி அகலத்தில் கபடி விளையாட்டு மைதானம், மன்னார்புரம் பாலத்துக்கு கீழ் 300 அடி நீளம், 25 அடி அகலத்தில் கிரிக்கெட் விளையாட புல்தரை அமைத்தல் பணிகளும் மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த புதுமையான முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள், பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாலக்கரை பாலத்துக்கு கீழ் கடைகள் கட்டும் பணி ஒரு மாத்தில் முடிந்து விடும். அதன்பிறகு கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும். மற்ற இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பாலக்கரை பாலத்துக்கு கீழ் மினி கடைவீதி appeared first on Dinakaran.

Tags : Palakkarai Bridge ,Trichy ,Balakarai ,Thennur ,Maurice ,G.Corner ,Mannarpuram ,Aristo ,Karur Bypass ,Thiruvanaikaval ,Balakarai Bridge ,Dinakaran ,
× RELATED திருச்சி பீம நகரில் வாலிபர் திடீர் மாயம்