×

குல்தீப் யாதவ் தான் அணியை வழிநடத்தி பெவிலியன் அழைத்து செல்ல வேண்டும்: சிலிர்க்க வைத்த அஸ்வின்!!

தரம்சாலா: இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவுற்ற நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. இந்நிலையில் சம்பிரதாய போட்டியான 5வது டெஸ்ட் இன்று தரம்சாலா மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு என்ற சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமானது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் சாக் கிராலி மட்டுமே சற்று தாக்குப்பிடித்து 79 ரன்களை எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறி தங்களது விக்கெட்டுகளை தாரைவார்த்தனர்.

இந்திய அணி தரப்பில் முச்சுழல் வீரர்கள் இங்கிலாந்து அணியை சிதைத்தனர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் “லெஜண்ட்” அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஏன் தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தோம் என்ற நிலைக்கு இங்கிலாந்து அணியை கொண்டு வந்தது இந்திய அணி.

இது அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனவுடன் பெவிலியன் நோக்கி வந்த போது குல்தீப் யாதவும், சிராஜும் அஸ்வின் அணியை வழிநடத்தி பெவிலியன் இட்டுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி அவர் கையில் பந்தைக் கொடுத்தனர்.

ஆனால் அஸ்வின் அதை ஏற்க மறுத்து குல்தீப்தான் அணியை வழிநடத்தி பெவிலியன் அழைத்துச் செல்ல தகுதியானவர் என்று அவரிடம் பந்தைக் கொடுத்து ரசிகர்களை நெகிழ வைத்தார். பின்னர் குல்தீப் இதை ஒரு மாதிரி அரை மனதுடன் ஏற்று பந்தை ரசிகர்களிடம் தூக்கிக் காட்டிய படி அணியை வழிநடத்திச் சென்றார். இந்த சம்பவத்தையடுத்து அஷ்வினின் பெருந்தன்மையை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

The post குல்தீப் யாதவ் தான் அணியை வழிநடத்தி பெவிலியன் அழைத்து செல்ல வேண்டும்: சிலிர்க்க வைத்த அஸ்வின்!! appeared first on Dinakaran.

Tags : Kuldeep Yadav ,Ashwin ,Dharamsala ,England ,India ,Dinakaran ,
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...