×

இந்த ஐபிஎல் சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தினேஷ் கார்த்திக் முடிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ்கார்த்திக். 39 வயதை நெருங்கிய இவர் இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒரு நாள் போட்டி, 60 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்துள்ள 16 சீசன்களில் ஆடி உள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் வாழ்க்கையை ஆரம்பித்த தினேஷ் கார்த்திக், 16 சீசன்களிலும் 2 போட்டிகளை மட்டுமே தவற விட்டுள்ளார். டேர்டெவில்ஸ் (2008-14), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011), மும்பை இந்தியன்ஸ் (2012-13), குஜராத் லயன்ஸ் (2016-17), நைட் ரைடர்ஸ் (2018-21) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் (2015, 2022 முதல்) ஒட்டுமொத்தமாக 240 போட்டிகளில், 26 சராசரியுடன் 4516 ரன் எடுத்துள்ளார்.

டேர்டெவில்ஸ் கேப்டனாக 6, 2018-20 நைட் ரைடர்ஸ் கேப்டனாக 37 போட்டிகளில் வழி நடத்தி உள்ளார். இதில் 21ல் வெற்றி, 21ல் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் தினேஷ்கார்த்திக நடப்பு சீசனுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஓய்வுக்கு பின் முழுநேர வர்ணணையாளராக பணியாற்ற உள்ளார்.

The post இந்த ஐபிஎல் சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தினேஷ் கார்த்திக் முடிவு appeared first on Dinakaran.

Tags : Dinesh Karthik ,IPL ,Chennai ,Indian ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி