×

கிளர்ச்சி குழுக்கள் இடையே நடந்த மோதலில் 40 பேர் உயிரிழப்பு!

கிளர்ச்சி குழுக்கள் இடையே நடந்த மோதலில் 40 பேர் உயிரிழந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், இந்த குழுக்கள் இடையே மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் பினு மாகாணம் உகம் பகுதியில் 2 கிளர்ச்சி குழுக்களுக்கு இடையே கடந்த 2 நாட்களாக பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் சம்பவத்தையடுத்து உகம் பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

The post கிளர்ச்சி குழுக்கள் இடையே நடந்த மோதலில் 40 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : IS ,Al-Qaeda ,Boko Haram ,African ,Nigeria ,
× RELATED கல்வியைவிட உயர்வானது எது?