×

குட்கா விவகாரம்: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீதான வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைப்பு

சென்னை: குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு எதிராக ED தொடர்ந்த வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ வழக்கு அடிப்படையில் பி.வி.ரமணா, ஒன்றிய அரசு, மாநில அரசு ஊழியர்கள் உட்பட 27 பேர், 4 நிறுவனங்கள் மீது ED வழக்குப்பதிவு செயதுள்ளது. சிபிஐ தாக்கல் செய்ய உள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கைக்கு பின்னர் அதன் அடிப்படையில் விசாரணை என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மலர் வாலன்டினா உத்தரவிட்டார்.

The post குட்கா விவகாரம்: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீதான வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : minister ,PV Ramana ,CHENNAI ,ED ,Gutka ,CBI ,Union Government ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்