×

புதுச்சேரி சிறுமி வழக்கு; காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த கால்வாயில் சிறுமியின் உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர் மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இந்நிலையில், புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமி உடல் அடக்கம் செய்யப்பட்டு, கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின் இன்று மாலை போலீஸ் இடமாற்ற உத்தரவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post புதுச்சேரி சிறுமி வழக்கு; காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Puducherry Muthialpet ,Muthyalpet, New State ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...