- திருச்சி
- திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபம்
- மாநகர போலீஸ் ஆணையர்
- காமினி
- காவல்துறை இயக்குநர்
- கலெக்டர்
- பொலிஸ் ஆணையாளர்
திருச்சி, மார்ச் 7: திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மக்களுடன் முதல்வா் முகாம், காவல்துறை இயக்குநா், மாவட்ட கலெக்டா் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் பொதுமக்கள் தரப்பில் அளித்த புகார் மனுக்களின்மீது தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று (மார்ச் 6ம் தேதி) புதன்கிழமை பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கே.கே.நகா் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் காமினி முகாமிற்கு தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 26 மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது தீர்வுகாண அறிவுறுத்தினார்.
மேலும் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வா் முகாம், முதலமைச்சாின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநாிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 432 மனுக்களில், 290 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 142 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 11 பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த 373 மனுக்்களில் 128 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டு மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், போலீஸ் துணை கமிஷனர் தெற்கு மற்றும் வடக்கு, காவல் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்டவை உள்பட பொதுமக்களின் புகார் மனு மீது சிறப்பு குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.