×

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் 36 அரிய வகை பறவையினங்கள்

தஞ்சாவூர், மார்ச் 7: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாக 36 அரிய வகை பறவையினங்கள் வந்துள்ளது கணக்கெடுக்கும் பணியில் தெரியவந்திருக்கிறது. தமிழ்நாடு வனத்துறை மூலம் தமிழகம் முழுவதும் 2024ம் ஆண்டு மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் நடைபெற்ற தரை வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக வளாகத்திலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி, பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் ஆகியோர் மேற்பார் வையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காலை 6 மணி முதல் 10 மணி வரை இரண்டு குழுக்களாகப் பிரிந்து பேராசிரியர்கள், வன அலுவலர்கள் மாணவ- மாணவிகள் ஆகியோர் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் கருந்தலைக் குயில் கீச்சான், காட்டுத் தகைவிலான், நீல முகசெண்பகம் மற்றும் அரசவால் ஈப்பிடிப்பான் என்று இப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ள அரிய வகை பறவையினங்கள் உட் பட 36 வகை பறவைகளும், 457 எண்ணிக்கைகளும் கண்டறிந்து பதிவு செய்யப்பட்டது.

சுற்றுச்சூழல் அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் கவிதா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவையியல் வல்லுனர் டாக்டர் தினேஷ் ராஜா கலந்து கொண்டு புதிய பறவைகளை அடையாளப்படுத்தியும், வகைப்படுத்தியும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இக்குழுவில் பேராசிரியர் ராகேஷ் சர்மா, பறவைகள் நிபுணர்கள் செல்வின், சக்தி மற்றும் மாணவ-மாணவிகள் சரவணவேல், சிந்து, சுதந்திரன், சிற்றரசி, கார்த்திக்ராஜா, ரகுநாத் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தஞ்சாவூர் வனச்சரக அலுவலர் ரஞ்சித் செய்திருந்தார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா இல்லாமல் குடியிருந்து வரும் 50 குடும்பங்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து நில உடமை மேம்பாட்டு திட்ட பதிவேடு குறிப்பு கலத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை என குறிப்பிடப்பட்டிருந்ததை மாற்றி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை வட்டம் ஆலடிக்குமுளை சுக்கிரன்பட்டி கிராம தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மக்களுக்கு கடந்த 28 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது.

The post தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் 36 அரிய வகை பறவையினங்கள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Tamil University ,Thanjavur ,Tamil Nadu ,Tamil Nadu Forest Department ,Dinakaran ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...