×

பெரம்பலூர் மாவட்டத்தில் 4,572 பேருக்கு ₹23.54 கோடி மதிப்பில் நலஉதவி `நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் துவக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனாளிகளிடம் அமைச்சர் கருத்து கேட்பு

பெரம்பலூர், மார்ச் 7: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட “நீங்கள் நலமா”என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத் திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை மாவட்டக் கலெக்டர் கற்ப கம் முன்னிலையில் (6ம் தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கேட்டறிந்தார்.

பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த கருத்துருக்களைக் கேட்டறியும் புது மையான திட்டமாக ”நீங்கள் நலமா” என்ற புதியத் திட்டத்தை தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்து பயனாளிகளுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடினார்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத் துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கள் பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள் மூலம் பயன டைந்த பயனாளிகளின் பட்டியலில் சிலரை தேர்வு செய்து அவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி அரசுத் திட்டங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.

அதனடிப்படையில், போக்கு வரத்துத்துறை வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட தொழில் மையம் என பல்வேறு துறைகளில் பயனடைந்த பயனாளிகளிடம் உரையாடினார். எழுமூர் கிராமத்தை சேர்ந்த சுகன்யா, களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்புசெல்வி, தேவி ஆகிய பயனாளிகள் பேசுகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் வழங்கப்படும் 1000 ரூபாய் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என்றும், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நிதி உப யோகமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், போக்குவரத்துத் துறையின் மூலம் செயல் படுத்தப்படும் விடியல் பயணம் திட்டத்தால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், அன்றாடம் போக்குவரத்திற்காக ஆகும் செலவுகள் சேமிக் கப்படுவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தாட்கோ மூலம் பயனடைந்த கோமதி மற்றும் மாவட்ட தொழில் மையத் தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத் தின் மூலம் அரசின் மானிய த்துடன் கடனுதவி பெற்று தொழில் புரிந்துவரும் முத்துக்குமரன் ஆகியொர் தெரிவிக்கையில், இந்த திட்டத்தால் தங்கள் வாழ் வில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது என்றும், இன்று கம்யூட்டர் பிரவுசிங் சென்டர், சிமெண்ட் செங் கல் மற்றும் மேற்கூரை தயாரிப்பு தொழில் செய்து முன்னேறியுள்ளதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியின்போது பெரம்பலூர் எம்எல்ஏ பிரபா கரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவ லர் வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டஇயக்குநர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் அருணாச்சலம், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலா ளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 4,572 பேருக்கு ₹23.54 கோடி மதிப்பில் நலஉதவி `நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் துவக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயனாளிகளிடம் அமைச்சர் கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Perambalur district ,PERAMBALUR ,NADU ,K. ,Stalin ,Minister of Transport ,Cha. C. ,Sivasangar ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை