×

போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செயல் அலுவலர் நேரடி ஆய்வு போளூர் நகரம் முழுவதும்

போளூர், மார்ச் 7: போளூர் நகரம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் வைத்திருந்த இடத்தை அகற்றம் செய்யபட்டது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் நேரடி ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருராட்சி பகுதியில் கடைவைத்திருப்பவர்கள் தனது இடங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்திருந்தனர். இதனால் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் போக்கு வரத்து பாதிக்கப்பட்டன. இதனால் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனையொட்டி போளூர் நகர் முழுவதும் கடை வைத்திருப்பவர்கள் பஜார் வீதி, சிந்தாதிரிபேட்டை தெரு, வீரப்பன் தெரு, உட்பட பல்வேறு பகுதியில் இடைஞ்சலாக உள்ள இடங்களையும், கடை வைத்திருப்பவர்களையும் செயல் அலுவலர் யூ.முகம்மத்ரிஸ்வான் நகர் முழுவதும் சுற்றி சொந்த இடத்தை மீறி இடங்களை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பவர்களை உங்கள் இடத்துக்கு உட்பட்ட கடை வைத்து கொள்ளுங்கள். அதிக இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என தெரிவித்து தேவைக்கு மீறி ஆக்கிரமித்த இடங்களை அகற்றினார். மேலும் தனது இடத்தை மீறி ஆக்கிரமித்து இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, முதுநிலை எழுத்தர் அ.முகம்மம் இஸ்சாக், துப்புரவு மேற்பார்வையாளர் ப.நாவரசன் உட்பட பேருராட்சி பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

The post போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செயல் அலுவலர் நேரடி ஆய்வு போளூர் நகரம் முழுவதும் appeared first on Dinakaran.

Tags : Polur ,Executive ,Thiruvannamalai District ,Dinakaran ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...