×

பிளாஸ்டிக் இல்லா நகரமாக திருச்செந்தூரை மாற்ற ஒத்துழைக்க வேண்டும்

திருச்செந்தூர், மார்ச் 7: நகராட்சி ஆணையர் கண்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் நகராட்சியானது மிகவும் பிரசித்திப் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் திருத்தலமாகும். இத்திருத்தலத்திற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து அதிகமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் நகராட்சி பகுதியில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைத்துக் கொள்ளவோ பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கினை ஒழித்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

The post பிளாஸ்டிக் இல்லா நகரமாக திருச்செந்தூரை மாற்ற ஒத்துழைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Municipal Commissioner ,Kanmani ,Tiruchendur Municipality ,Subramania Swamy temple ,Thiruthalam ,Tamilnadu ,
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்