×
Saravana Stores

அம்பையில் முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது

அம்பை, மார்ச் 7: அம்பையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை முருகன் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (28). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பொன்னுசாமி தனது வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் அவரை வழிமறித்து அவதூறாக பேசி தாக்கினார். இதுகுறித்து பொன்னுசாமி அம்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அக்னல்விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post அம்பையில் முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Ambai ,Ponnusamy ,Ambasamudram ,Subramaniapuram Pothai Murugan Temple Sannathy Street ,Manikandan ,
× RELATED அண்ணன் சொத்து பிரித்து தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை