×

4.98 கோடியில் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம், மார்ச் 7: வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில் ₹4.98 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். வெண்ணந்தூர் ஒன்றியத்தில், ஓ.சௌதாபுரம் ஊராட்சி, அலவாய்ப்பட்டி ஊராட்சி, மதியம்பட்டி ஊராட்சி, மின்னக்கல், அனந்தகவுண்டம்பாளையம், கட்டனாச்சம்பட்டி, இரா.புதுப்பாளையம் மற்றும் கல்லாங்குளம் ஊராட்சிகளில் 25க்கும் மேற்பட்ட பணிகள் ₹4 கோடியே 98 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட், கான்கிரீட் சாலை, ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டிடம், புதிய சித்தா மருத்துவ பிரிவு கட்டிடங்கள் மற்றும் தார்சாலைகள் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய அட்மா குழு தலைவர் துரைசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி, அத்தனூர் பேரூராட்சி தலைவர் சின்னசாமி, துணை தலைவர் கண்ணன், நாராயணசாமி, அலமேலு குமரேசன், செல்வி சுப்பிரமணியம், கட்டனாச்சம்பட்டி தங்கதுரை, ராஜேந்திரன், தமிழ்மணி, பாலு, அரிதேவன், சத்தியமூர்த்தி, கௌரி, வெங்கடாசலம், சண்முகசுந்தரம், சக்திவேல், ரவி, கனகம், ரவீந்தர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 4.98 கோடியில் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Minister ,Mathiventhan ,Bhoomi Puja ,Vennandur ,Vennanthur Union ,O.Chaudapuram Panchayat ,Alawaipatti Panchayat ,Mathiyampatti Panchayat ,Minnakal ,Ananthakoundampalayam ,Kattanachampatti ,Ira.Puthupalayam ,Kallangulam ,Bhumi Pooja ,
× RELATED விவசாயி பையில் கொண்டு சென்ற ரூ.500...