×

ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் அரசு அதிகாரி கைது

திருவனந்தபுரம், மார்ச் 7: திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (55). ஆலப்புழா மாவட்ட கேரள அரசு லாட்டரித் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது பக்கத்து இருக்கையில் வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். திடீரென அந்த பெண்ணிடம் கிறிஸ்டோபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ரயில் எர்ணாகுளத்தை வந்தடைந்தது. உடனே அந்த வெளிநாட்டுப் பெண் எர்ணாகுளம் ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிஸ்டோபரை கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணைக்குப் பிறகு போலீசார் அவரை ஆலப்புழா ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் அரசு அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Chilmisham government ,Thiruvananthapuram ,Christopher ,Kerala Government Lottery Department ,Alappuzha District ,Ernakulam ,Janasatapdi Express ,
× RELATED கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை