×

நவீன் பில்டர்ஸ் கட்டுமான நிறுவனம் விளக்கம் அமலாக்கத்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை

சென்னை: நவீன் பில்டர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எங்கள் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது முற்றிலும் தவறானது ஆகும். எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் நவீன் இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ இதுபோன்ற எந்தவித சோதனையும் நடைபெறவில்லை. எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் நவீன் திருவான்மியூரில் வசிக்கவில்லை. எங்கள் நிறுவனம் எந்தவொரு சட்டவிரோத வணிக நடவடிக்கைகளின் வரலாறும் இல்லாத ஒரு வெளிப்படையான நிறுவனமாகும்.

The post நவீன் பில்டர்ஸ் கட்டுமான நிறுவனம் விளக்கம் அமலாக்கத்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை appeared first on Dinakaran.

Tags : NAVIN BUILDERS CONSTRUCTION COMPANY ,Chennai ,R. Kumar ,Naveen Builders Construction Company ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...