×

ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம்

மாஸ்கோ: ரஷ்யாவில் ஐதராபாத் வாலிபர் இறந்துவிட்டார். அவரது சடலத்தை நாடு கொண்டு வரஅதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்திய தூதரகம் அறிவித்தது.ரஷ்யாவில் இறந்தவர் முகமது அஸ்பான் என அடையாளம் கண்டுள்ளது. ஆனால் அவர் இறந்த சூழ்நிலைகள் குறித்து எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,’ இந்திய நாட்டவர் முகமது அஸ்பானின் துயர மரணம் பற்றி நாங்கள் அறிந்தோம். அவரது குடும்பம் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம் appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Hyderabad ,Indian embassy ,Mohammad Asfan ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...