×
Saravana Stores

நீலகிரி மாவட்டத்தில், ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், உபாசி கூட்டரங்கத்தில், ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கரும்பாலம் மற்றும் மகாலிங்கா-2 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர் .கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் இன்று (06.03.2024) துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தேயிலையும், சுற்றுலாவும் தான் முக்கிய பங்காற்றுகிறது. இதனை நன்கு உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரசு தேயிலை தொழிற்சாலைகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் தேயிலை கிலோ 1க்கு ரூ.2 மானியமாக வழங்கப்படும் 61601 அறிவித்துள்ளார்கள். இதன் காரணமாக தேயிலை உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில், தனியார் தேயிலை தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அதிக இலாபம் ஈட்டும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இண்ட்கோசர்வ். எனவே, தேயிலை உற்பத்தியாளர்கள் தரமான தேயிலைகளை தொடர்ந்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி விற்பனை அதிகரிக்க செய்து, லாபத்துடன் தொடர்ந்து நடத்திட உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று ரூ.5.6 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட கரும்பாலம் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையும், ரூ.3.62 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த கல்வியை பயிற்றுவிக்க ஏதுவாக சாலிஸ்பெரி தேயிலை தொழிற்சாலைக்கு ரூ.6.40 இலட்சம் மதிப்பில் பேக்கிங் இயந்திரமும், இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில் ரூ.2.27 கோடி மதிப்பில் 8 லாரிகளும், மினி லாரிகளும் இன்று வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தேயிலைத் தூள் தயாரிப்பில் விறகுகளின் பயன்பாட்டை தவிர்க்கவும், மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் வகையில் பிற தொழிற்சாலைகளுக்கு முன்னோடியாக கைக்காட்டி தேயிலை தொழிற்சாலையில் ரூ.2.26 கோடி மதிப்பில் 250 கிலோ வாட் மின் சக்தி கொண்ட சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட சிறு தேயிலை தோட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 16 தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 15 தொழிற்சாலைகள் 1962 முதல் 1990கள் வரை உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள். சராசரியாக இந்த தொழிற்சாலைகள் தொடங்கி 25 முதல் 60 ஆண்டுகள் ஆகின்றன. இண்ட்கோசர்வ் நிறுவனமும், மாறி வரும் வியாபார சூழ்நிலைக்கேற்ப தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் அதன் தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தும் பணியை அரசு துவங்கியது.

அதன் அடிப்படையில், நபார்டு நிதி உதவியை கொண்டு முதல் கட்டமாக ரூ.18.54 கோடி மதிப்பில் மஞ்சூர், குந்தா, கைக்காட்டி, சாலிஸ்பெரி, பந்தலூர் ஆகிய தேயிலைத் தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களை பொறுத்தியும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்டமாக ரூ.50.6 கோடி மதிப்பில் 10 தொழிற்சாலைகளை நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கரும்பாலம், மகாலிங்கா தொழிற்சாலைகள் பணிகள் முடிக்கப்பட்டு, இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 தொழிற்சாலைகளில் ரூ.41.38 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. விரைவில் இந்த தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தேயிலை தரத்தினை உயர்த்தவும், விற்பனையை அதிகரிக்கவும், கடந்த ஆண்டு இண்ட்கோசர்வில் ரூ.3.90 கோடி மதிப்பில் அதிநவீன கலப்பு மற்றும் Packaging unit செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் டன் பசுந்தேயிலையை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து 35,324 டன் தேயிலை தயாரித்து ரூ.322 கோடியே 3 லட்சம் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. இதுவரை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கிய 27 ஆயிரம் குறு, சிறு விவசாயிகளுக்கு இருந்து ரூ.322 கொள்முதல் செய்து 35.324 டன் தேயிலை தயாரித்து கோடியே 3 லட்சம் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. இதுவரை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கிய 27 ஆயிரம் குறு, சிறு விவசாயிகளுக்கு தொழிற்சாலைகள் மூலம் ரூ.199 கோடியே 25 லட்சமும், இண்ட்கோசர்வ் மூலமாக ரூ.12 கோடியே 86 லட்சமும், அரசு மானியமாக ரூ.5 கோடியும் ஆக மொத்தம் ரூ.217 கோடியே 11 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தாயுள்ளதோடு, பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதல் ஆதார விலையாக வழங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள். இதன் மூலம் 27 ஆயிரம் குறு, சிறு தேயிலை விவசாயிகள் பயன் அடைவார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமச்சீர் தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் 5 சுய தொழில் திட்டங்களின் கீழ் ரூ.1,265 கோடியே 12 லட்சம் மானியத்துடன் ரூ.3,613 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 36,974 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

இதில் 14,884 பெண்கள், 5,820 பட்டியல் இனத்தவர், 1,840 சிறுபான்மையினர், 540 மாற்றுத்திறனாளிகள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 22 ஆண்டு காலத்தில் ரூ.11.22 கோடி மானியத்துடன் ரூ.44 கோடியே 2 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 579 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

MSME தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அரசு 10 வகையான மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 60 MSME நிறுவனங்களுக்கு ரூ.2.73 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேயிலை விவசாயிகளின் சிரமம் அறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கும் விவசாயிகள் தரமான தேயிலை வழங்க வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த தேயிலை தொழிலில் குறைந்த விலையில் தரமான டீ தூள்களை தயாரித்து வழங்கினால் மட்டுமே, மக்களின் ஆதரவினை பெற முடியும்.

அதன் மூலம் விற்பனை அதிகரிக்க முடியும். நமது தொழிற்சாலைகளை லாபத்துடன் தொடர்ந்து நடத்திடவும் முடியும். ஆகவே தேயிலை விவசாயிகள் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதி உதவியுடன் பெறப்பட்ட 13 வாகனங்களை இண்ட்கோ தொழிற்சாலைகளுக்கு வழங்கும்பொருட்டு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து, இண்ட்கோசர்வ் பற்றிய கார்ப்பரேட் வீடியோவினை வெளியிட்டார்கள்

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் எஸ்ட்ரைவ் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட தொழில் பழகுநர்களுக்கு கையேடுகளை வழங்கி, சாலிஸ்பரி தொழிற்சாலைக்கு பேக்கிங் இயந்திரத்தினை வழங்கினார்.

முன்னதாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், கேத்தி பேரூராட்சி, அல்லஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 180 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

The post நீலகிரி மாவட்டத்தில், ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Ministers ,Nilgiri district ,Nilgiri ,Minister ,Micro, Small and Medium Enterprises ,MSMEs ,Department ,district ,Mo. Anbarasan ,Minister of Tourism ,Ramachandran ,Kunnur ,Dinakaran ,
× RELATED மழையால் அழுகியது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்