×

நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு.. விருப்ப மனு அளிப்பது எனது உரிமை: திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி!!

திருப்பூர்: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது. முதற்கட்ட பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா முடிந்தபின் விடுபட்ட இடங்களை திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் அவசரகதியில் தொடங்கப்பட்டது. திட்டத்தை செம்மைப்படுத்த வேண்டி இருந்ததால் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது பற்றி முடிவு செய்ய வேண்டியது கட்சித் தலைமை. விருப்பமனு தாக்கல் செய்வது எனது உரிமை என்பதால் நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

The post நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு.. விருப்ப மனு அளிப்பது எனது உரிமை: திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,DMK ,A. Raza ,Tirupur ,Athikadavu ,Avinasi ,Tirumuruganpoondi ,Ah ,
× RELATED நீலகிரியில் ராகுல் காந்தி வந்த...