×

கூடலுாரில் அருகே வனப்பகுதியில் நடந்தே சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய சுகாதாரத்துறை: பழங்குடியின மக்கள் நன்றி

நீலகிரி: கூடலூர் அருகே வனப்பகுதியில் நடந்தே சென்று சுகாதாரத்துறையினர் பழங்குடியின குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக – கேரளா எல்லையில் உள்ள கிளான் டிராக் வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பந்தலூர் பஜாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாத நிலையில், நடைபாதையை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பழங்குடியின குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக சுகாதாரத்துறையினர் அந்த அடர்ந்த வனப்பகுதிகளில் நடந்து சென்றனர்.

போகும் வழியில் கரடு முரடான ஒத்தையடி பாதை மற்றும் ஆறுகளை சிரமப்பட்டு கடந்த அந்த குழுவினர், போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர். பழங்குடியின மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளும் வழங்கப்பட்டன. வனத்துறையினரின் பாதுகாப்பில், வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவே மருத்துவம் பார்க்க சென்ற சுகாதாரத்துறையினருக்கு பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post கூடலுாரில் அருகே வனப்பகுதியில் நடந்தே சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய சுகாதாரத்துறை: பழங்குடியின மக்கள் நன்றி appeared first on Dinakaran.

Tags : health department ,Kudaluril ,Nilgiris ,health ,Kudalur ,Clan Drak forest ,Tamil Nadu-Kerala border ,Pandalur ,Nilgiris district ,Pandalur… ,
× RELATED பல்லாவரம் அருகே யூடியூப் விளம்பரத்தை...