×

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

பெங்களூர்: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் குண்டு வைத்தவரின் விவரம் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

பெங்களூருவில் இந்திரா நகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், குந்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில்கடந்த 1ம் தேதி மதியம் 1.30 மணியளவில் ஓட்டலில் கை கழுவும் வாஷ் பேசின் பக்கத்தில் மர்ம பையில் இருந்த 2 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. குண்டு வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

தகவலறிந்து தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் வெடிகுண்டு வைத்திருப்பவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்” என என்ஐஏ தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு என்ஐஏ வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளை 08029510900 அல்லது 8904241100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது.

The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Rameswaram cafe ,NIA ,Rameswaram ,Indira Nagar ,Bengaluru Rameswaram cafe ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...