×

‘செல்போன் பேசக்கூடாது’’ என்றதால் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

பெரம்பூர்: ‘‘செல்போனில் விளையாடாமல் படி’’ என்று சொன்னதால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை புளியந்தோப்பு டிம்ப்லர்ஸ் ரோடு கே.பி. பார்க் 11வது பிளாக்கை சேர்ந்தவர் சரவணன். இவர் டிரைவர். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு கீர்த்தனா (17) என்ற மகளும் ரித்திஷ் (14) என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் சூளையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தனர். தற்போது 11 ம் வகுப்பு தேர்வுகள் நடப்பதால் நேற்றிரவு எட்டு மணி அளவில் கீர்த்தனா படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் சரவணன், ‘’தற்போது தேர்வு நடக்கிறது அதற்கு படிக்காமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருக்கிறாய். ஒழுங்காக படி’ என்று தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இதன்பிறகு பக்கத்து வீட்டில் வசித்துவரும் கீர்த்தனாவின் சித்தி மகன் மணிகண்டன் வந்து கதவை தட்டியபோது திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கீர்த்தனா ஹாலில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதுசம்பந்தமாக பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post ‘செல்போன் பேசக்கூடாது’’ என்றதால் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,CHENNAI ,PULYANTOPPU ,TIMBLER ,ROAD ,K.P. ,Saravanan ,Park 11th block ,Gomati ,Kirtana ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது